அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

 

அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி!

சென்னையில் மட்டுமே 2008 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, புதிதாக 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டுமே 2008 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 

ttn

இதனிடையே ஏழை, எளிய மக்களின் பசியை ஆற்ற அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதிலும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவதால், இந்த ஊரடங்கை சமாளிக்க மக்களுக்கு உதவி வருகிறது. இந்நிலையில், சென்னை அம்மா உணவகத்தில் பணியாற்றும் மேலும் 2 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை சவுக்கார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட மக்களுக்கு கொரோனா பரவியிருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக சென்னை ஐஸ்அவுஸ், கஜபதி தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றிய ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.