அம்மா உணவகத்தில் தரக்குறைவான உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை

 

அம்மா உணவகத்தில் தரக்குறைவான உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை

அம்மா உணவகத்தில் தரக்குறைவான உணவுகள் வழங்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சென்னை: அம்மா உணவகத்தில் தரக்குறைவான உணவுகள் வழங்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அடித்தட்டு மக்கள் குறைந்த விலையில் தரமான உணவு பெற அம்மா உணவகம் என்ற திட்டத்தை தொடங்கினார். குறைந்த விலையில் மூன்று வேளைகளிலும் உணவு கிடைப்பதால் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதேசமயம் தரக்குறைவான உணவு வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திடீர் சோதனை மேற்கொண்டார். உணவுகளின் தரத்தை சோதனை செய்த அவர், தரமான உணவுகளை வழங்கும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகளை விநியோகம் செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்வரின் ஒப்புதல்  கிடைத்ததும் உணவகங்கள் அதிகரிக்கப்படும் என்றார்.