‘அம்மா’ இரு சக்கர வாகனம்.. எப்படி விண்ணப்பிப்பது? என்ன தேவை?

 

‘அம்மா’ இரு சக்கர வாகனம்.. எப்படி விண்ணப்பிப்பது? என்ன தேவை?

தமிழ்நாட்டில் பணிக்கு செல்லும் ஏழை மகளிருக்கான மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் இருசக்கர வாகனங்களுக்கான விண்ணப்பங்களை நேற்று முதல் மாநகராட்சி அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. தமிழக அரசு தரும் இருசக்கர வாகனங்களுக்கான மானியத் தொகையை எப்படி பெறுவது, அதற்கான விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும், தகுதிகள், வேண்டிய ஆவணங்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்த கட்டுரையில் படிக்கலாம் வாங்க!

தமிழ்நாட்டில் பணிக்கு செல்லும் ஏழை மகளிருக்கான மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் இருசக்கர வாகனங்களுக்கான விண்ணப்பங்களை நேற்று முதல் மாநகராட்சி அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. தமிழக அரசு தரும் இருசக்கர வாகனங்களுக்கான மானியத் தொகையை எப்படி பெறுவது, அதற்கான விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும், தகுதிகள், வேண்டிய ஆவணங்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்த கட்டுரையில் படிக்கலாம் வாங்க!

amma two wheeler

தமிழ்நாட்டில் வசித்து வரும் பெண்கள் இந்த மானிய விலையிலான வாகனத்திற்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்கள், குறைந்த பட்சமாக 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதற்கான வயது தகுதியாக 18 வயது முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனத்தை வாங்குவதற்கான விண்ணப்பத்தை அளிக்கும் போதே, விண்ணப்பத்தாரரின் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதற்கான நகலையும் தர வேண்டும். அதனால், விண்ணப்பிப்பதற்கு முன்பே ஓட்டுநர் உரிமம் எடுத்திருக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் பெண்கள்,  தனிநபர் ஆண்டு வருமானமாக ரூ.2,50,000 லட்சத்தை தாண்டக் கூடாது. 
நீண்ட தூரம் பயணம் செய்து பணிபுரிந்து வரும் மகளிர் இத்திட்டத்திற்கான முதன்மை பயனாளிகளாக கருதப்படுகிறார்கள். தவிர, அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்படாத தொழிற் பிரிவுகளில் பணியாளர்களாக தங்களை பதிவு செய்துள்ள மகளிர், கடைகள் / தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர், சுயதொழில் / சிறுவணிகத்தில் ஈடுபட்டுள்ள மகளிர், அரசு உதவிபெறும் நிறுவனங்கள் / தனியார் நிறுவனங்கள் / அரசு திட்டங்கள் / சமுதாயம் சார்ந்த அமைப்புகள், ஆகியவற்றில் தொகுப்பு ஊதியம் / தினக்கூலி / ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் மகளிர், வங்கி ஒருங்கிணைப்பாளர் / சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் எல்லாம் விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய பயனாளிகளாக கருதப்படுகிறார்கள். 
விண்ணப்பிக்கும் பயனாளிகளில் பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பங்களைச் சார்ந்த மகளிர், ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனுடைய மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் மகளிர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு, அவர்கள் புதியதாக வாங்கும் மகளிருக்கான இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000/- இவற்றில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும். தவிர, வாகனம் வங்கி கடன் மூலம் வாங்கப்பட்டால், மானியத் தொகை பயனாளிகளின் வாகன கடன் கணக்கிற்கு வங்கி மூலம் விடுவிக்கப்படும்.

vechile

வாகனம் 01.01.2018 தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், வாங்கப்படும் வாகனம் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதாகவும், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் வட்டார போக்குவரத்து அலுவலரால் பதிவு செய்யப்படும் வகையில் இருக்க வேண்டும். இருசக்கர வாகனமானது 125 சிசி குதிரைத்திறன் சக்தி கொண்டதாகவும் இருப்பது அவசியம்.
வாகனத்தின் மானியத்திற்காக விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பிப்பவர்களின் வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளையும் இணைக்க வேண்டியது அவசியம்.