அம்மா ஆவியின் ஆணைப்படி அஜீத்துக்கு #HBDAjithkumar சொன்ன ஓ.பி.எஸ்…

 

அம்மா ஆவியின் ஆணைப்படி அஜீத்துக்கு #HBDAjithkumar சொன்ன ஓ.பி.எஸ்…

அஜீத்குமாரின் பிறந்தநாள் வாழ்த்து ஹேஷ்டேக்கான  ’ஹேப்பி பர்த்டே தல’ நேற்று நள்ளிரவு முதல் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வமும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து எடப்பாடி வட்டாரத்துக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.

சென்னை: அஜீத்குமாரின் பிறந்தநாள் வாழ்த்து ஹேஷ்டேக்கான  ’ஹேப்பி பர்த்டே தல’ நேற்று நள்ளிரவு முதல் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வமும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து எடப்பாடி வட்டாரத்துக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.

ops

சரியாக 12.10க்கு தனது ட்விட்டர் பக்கத்தில், …எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDAjithkumar என்று ஓ.பி.எஸ். பதிவிட்டுள்ளார்.

 

முதல்வர் எடப்பாடியுடன் பலத்த கருத்து வேறுபாடு கொண்டுள்ள ஓ.பி.எஸ். அடுத்து எந்த நிமிடமும் இன்னொரு தர்ம யுத்தத்தில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் அஜீத்தை வானளாவப் புகழ்ந்து இப்படி ஒரு வாழ்த்து அனுப்பியுள்ளதை மற்ற அரசியல்வாதிகள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதாக இல்லை.

ajith

‘இனி ஓ.பி.எஸ், தல அஜீத் சந்திப்பு எந்த 5 நட்சத்திர ஹோட்டல்களில் நடந்தது. என்னவெல்லாம் பேசிக்கொண்டார்கள். துணை முதல்வர் பதவிக்கு அஜீத் ஒத்துக்கொள்ளவில்லை’…அம்மா ஆவி சொன்னதால் அஜீத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன ஓ.பி.எஸ்’ போன்ற கிசுகிசுக்களை பொதுமக்கள் சந்தித்தே தீரவேண்டும்.