’அம்மாவுடன் நான் சென்ற இடம்’ – அம்மாவைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

 

’அம்மாவுடன் நான் சென்ற இடம்’ – அம்மாவைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

தமிழகத்திற்கு பெருமையைத் தேடித் தந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளார். அவரின் எல்லாமுமாக இருந்த அம்மா அவரை விட்டு பிரிந்து விட்டார்.

இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவை நோக்கி உலகின் பார்வையைத் திருப்பியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் கடும் உழைப்பிலும் நவீன இசைபாணியாலும் குறுகிய காலத்தில் இந்தியா முழுக்க புகழ்பெற்றார்.

’அம்மாவுடன் நான் சென்ற இடம்’ – அம்மாவைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்திப் படங்கள் பெரும் வெற்றிப் பெற்றன. அதனால், இந்திப் பட உலகம் ரகுமானை நோக்கி வந்தது. பல படங்களுக்கு ரகுமான் இசைக்காகக் காத்துகிடந்தனர். இந்தச் சூழலில் ’ஸ்லம் டாக் மில்லியனியர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். விருது விழா மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று தமிழில் சொல்லி பேச்சைத் தொடங்கியவர்.

அம்மா மீது அளவற்ற அன்பு கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரின் முதல் பாடலான சின்ன சின்ன ஆசையை அம்மாவிடம் ஆசையோடு போட்டிக்காட்டினார் ரஹ்மான்.

அம்மா பாராட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில், பாட்டைக் கேட்டது சத்தமாக அழத் தொடங்கி விட்டார் அம்மா. எதற்காக அழுகிறார் என்று ரகுமான் குழம்பி விட்டார். ஒருவேளை பாட்டு சரியில்லையோ… அம்மாவுக்குப் பிடிக்கவில்லையோ என்றுகூட நினைத்தார். ஆனால், ரகுமானின் அம்மா அழுதது ஆனந்த கண்ணீர். ”இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு மட்டும் இல்ல, கேட்கிற எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்று கூறியிருக்கிறார். அப்பறம்தான் ரகுமானுக்கு நிம்மதியே வந்தது.

’அம்மாவுடன் நான் சென்ற இடம்’ – அம்மாவைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

திலிப்குமாராக இருந்தவர் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறினார். அதாவது இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார். இதற்கு பின் உள்ள விஷயங்களை இசை விமர்சகர், நடிகர் ஷாஜியிடம் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துகொண்டுள்ளார். அதை ஷாஜி எழுதியபோது, ”அப்பா உடல்நிலை சரியில்லதபோது பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தோ, பாதிரியார்கள் ஜெயப் செய்தார்கள். பூஜைகள் நடந்தன. ஆனாலும், அப்பா இறந்து விட்டார். சில நாள்கள் கடவுளே இல்லை என்று நினைத்தேன். பிறகு, பீர் சாகிப்பின் அறிவுரைப்படி தர்க்காக்களுக்கு என் அம்மாவுடன் சென்று வந்தேன். அதன்பின்பே இஸ்லாத்துக்கு நாங்கள் குடும்பத்தோடு மாறினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.