அம்மாவுக்கு அட்வைஸ் பண்ண வைரல் பாப்பா ஸ்மித்திகா இப்படி தானாம்: அவங்க அம்மாவே சொல்றாங்க!!

 

அம்மாவுக்கு அட்வைஸ் பண்ண வைரல் பாப்பா ஸ்மித்திகா இப்படி தானாம்: அவங்க அம்மாவே சொல்றாங்க!!

சென்னை: அம்மாவுக்கு அட்வைஸ் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலான குட்டி பாப்பா ஸ்மித்திகாவின் சுட்டித்தனம் பற்றி அவரது தாய் பிரவீணா கூறுகிறார்.

குழந்தைகள் துறு துறு என்று எதையாவது செய்து அனைவரையும் கவர்வது இயல்பு. குழந்தையின் சுட்டித்தனத்தை கண்டு மகிழும் பெற்றோர், அது சேட்டை செய்தால் அடிக்கவும் செய்கின்றனர். சில பெற்றோர் ஆத்திரத்தில் அடித்துவிடுவதால், குழந்தைகளுக்கு அசம்பாவிதங்களும் நேர்ந்துவிடுகிறது. 

இந்நிலையில், தப்பு பண்ணினா அடிக்கக் கூடாது, குணமா வாயில சொல்லணும் என அழுதுக் கொண்டே அம்மாவுக்கு அட்வைஸ் கூறிய ஸ்மித்திகா பாப்பா சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்ங்கில் உள்ளார். ஸ்மித்திகாவின் வைரல் வீடியோவை வைத்து டப்ஸ்மேஷ், மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

smithika

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்மித்திகாவின் அப்பா ஆட்டோ டிரைவர், அம்மா திருப்பூர் பனியன் கம்பேனியில் டெய்லர். ஸ்மித்திகாவின் சுட்டித்தனம் பற்றி பேசிய அவரது அம்மா பிரவீணா, ஸ்மித்திகா படு சுட்டியான பொண்ணு, ரொம்ப எமோஷனல் டைப், ரொம்ப மெச்சூர்ட், எங்களுக்கே அவள் தான் அட்வைஸ் பண்ணுவா. ஸ்மித்திகாவுக்கு தோசை தான் ரொம்ப பிடிக்கும். அவ கேட்டதும் செஞ்சி கொடுத்திடனும் இல்லாட்டி ரணகளம் பண்ணிடுவா..வீட்டுல எப்பவும் இதுபோல விளையாட்டுத்தனமா ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பா என்றார்.

viral video

ஸ்கூலுக்கு கொண்டு போன சாப்பாட சாப்பிடாம அப்படியே கொண்டு வந்துட்டா, அது பத்தி கேட்டப்போ அழுதுட்டே இருந்தா.. அழுதுட்டே இருக்க, ஏன் இப்படி பண்ணினன்னு சொல்லி லேசா தட்டினேன்.. அதுக்கு தான் இப்படி அழுதுட்டே அட்வைஸ் பண்ணினா. இந்த வீடியோவ என் தோழி தான் ஃபேஸ்புக்ல பதிவிட்டாங்க.. எதிர்ப்பாராத விதமாக வைரலாகிவிட்டது என பிரவீணா கூறினார்.

டப்ஸ்மேஷ் செய்வதும், திருக்குறள் ஒப்பிப்பதும், பாடுவதும் என ஸ்மித்திகா நிறைய சேட்டை செய்வாள். அவளது இந்த வீடியோவுக்கு கிடைத்த ரீச் மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளதாக பிரவீணா தெரிவித்தார்.