அம்மாவுக்கும்- பொண்டாட்டிக்கும் அடிதடி… வெடித்துப் புலம்பும் சீமான்..!

 

அம்மாவுக்கும்- பொண்டாட்டிக்கும் அடிதடி… வெடித்துப் புலம்பும் சீமான்..!

அம்மாவுக்கும், பொண்டாட்டிக்கும் அடிதடி என்று கோபப்பட்ட வீட்டுக்காரன் போய் வெள்ளாட்டை வெட்டிய கதையாக இருக்கிறது இந்த நோட்டாவாதிகளின் பொழப்பு.

அம்மாவுக்கும்- பொண்டாட்டிக்கும் அடிதடி… வெடித்துப் புலம்பும் சீமான்..!

உணர்ச்சிக் கொந்தளிப்பின் ஒட்டுமொத்த சொந்தக்காரர்தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான். சகல வசதி படைத்த டி.டி.வி.தினகரனும், கமல்ஹாசனுமே வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கி நின்றனர். ஆனால் துணிந்து களம் கண்டார் சீமான். அத்தோடு ஒதுங்கி நின்றவர்களையும் விமர்சனத்தில் ஒரு வழி பண்ணி விட்டார்.

இந்நிலையில் ரிசல்ட் வந்து, கதிர் ஆனந்தும்  வெற்றி பெற்று விட்டார். ஆனாலும், ரிசல்ட் பேப்பரை எடுத்து வைத்துக் கொண்டு சிலர் சீமானை சீண்டி வருகிறார்கள். அதாவது, ’உங்க கட்சி பனிரெண்டாயிரத்து சொச்சம் வாக்குகள் வாங்கியிருக்கிறது. ஆனால், நோட்டா ஒன்பதாயிரத்து சொச்சம் வாங்கியிருக்கிறது. ஆக நோட்டாவை நம்புகிறவன் கூட உங்களை நம்ப மாட்டேங்கிறான்” என்று வம்பிழுத்துள்ளனர். இதற்கான பதிலை ஆவேசமாக அள்ளிக் கொட்டியிருக்கும் சீமான்.

”நோட்டாவுக்கு வாக்களிக்கும் தங்களை புரட்சியாளர்களாக நினைப்பவர்கள் மீது எனக்கு பெரிய வருத்தமுள்ளது. இவர்கள் மாற்றத்துக்கான போராளிகளில்லை. அவன் சரியில்லை.. இவன் சரியில்லை..என்று சொல்லி நோட்டாவுக்கு வாக்களிப்பவன் தான் உண்மையிலேயே ஆகச்சரியில்லை. ஒரு உண்மை தெரியுமா? நோட்டா வாக்குகளால் எந்த நன்மையுமே இல்லை. இதை நான் சொல்லலை, தேர்தல் விதியே சொல்லுது. எப்படி..? ஒரு தொகுதியில் வாக்களித்த அத்தனை மக்களும் நோட்டாவுக்கு போடுகிறார்கள். அங்கு நிற்கும் ஒரு வேட்பாளர் தனக்கு தானே ஓட்டு போட்டுக் கொண்ட வகையில் ஒரு வாக்கு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். வெற்றி யாருக்கு தெரியுமா? அந்த ஒற்றை வாக்கு மனிதருக்குதான். நோட்டாவுக்கு விழுந்த லட்சக்கணக்கான வாக்குகளும் வீணே. ஆக இதுவா புரட்சி?

மாற்றம் என்ற பெயரில் நோட்டாவாதிகள் தங்களுக்குத்தானே ஏமாற்றத்தை தந்து கொள்கிறார்கள். உண்மையைச் சொல்வதானால் கோடிகளைக் கொட்டி மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கிய அ.தி.மு.க, தி.மு.க. மீது எழாத கோபம் இந்த நோட்டா மக்கள் மீது எனக்கு எழுகிறது.

இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் வெறுப்பை சகித்துக் கொண்டு வாக்களிக்கவும், சகிக்க முடியாமல் நோட்டாவுக்கு செல்லும் மக்கள் ஏன் மற்றவர்களை சிந்திக்கும் திராணியை பெறுவதில்லை? அம்மாவுக்கும், பொண்டாட்டிக்கும் அடிதடி என்று கோபப்பட்ட வீட்டுக்காரன் போய் வெள்ளாட்டை வெட்டிய கதையாக இருக்கிறது இந்த நோட்டாவாதிகளின் பொழப்பு. எனக்கு இவனுங்க எவனையுமே பிடிக்கலை என்று தமிழர்கள் குறிப்பிடுவது இத்தனை காலம் மாறி மாறி ஆண்ட இரு திராவிட கட்சியினரையும்தான்.

அவர்களையும் தாண்டி மாற்றத்தை உண்மையிலேயே உருவாக்க துடிக்கும் பிள்ளைகள் நிற்கிறார்கள். அவர்களையும் பாருங்கள். நான் நோட்டாவாதிகளை ‘நாம் தமிழருக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று கேட்கவில்லை, ‘உங்களின் வாக்கை வீணாக்காதீர்கள்’ என்றுதான் கேட்கிறேன்.

ஒரு வார்த்தையில் சொல்கிற ஒரு உண்மையை புறக்கணிப்பு ஒரு நாளும் புரட்சியாகாது. எனவே நோட்டாவை விரும்புவதென்பது உங்களை நீங்களே குப்பைத் தொட்டிக்குள் வீசிக் கொள்வதற்கு சமம்” என்று கொந்தளித்து இருக்கிறார் சீமான்.