அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது! தமிழக அரசை விமர்சிக்கும் கமல்!!

 

அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது! தமிழக அரசை விமர்சிக்கும் கமல்!!

டாஸ்மாக் மதுக்கடைகளை ஊரடங்கு முடியும் வரை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நாங்கள்தான் பெற்றோம் என்று கமல் உரிமை கோரினார். ஆனால், வேறு ஒரு வழக்கறிஞர் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

டாஸ்மாக் மதுக்கடைகளை ஊரடங்கு முடியும் வரை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நாங்கள்தான் பெற்றோம் என்று கமல் உரிமை கோரினார். ஆனால், வேறு ஒரு வழக்கறிஞர் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடையை தமிழக அரசு வாங்கியுள்ளது. டாஸ்மாக் மூடப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து நாளை முதல் தமிழகம் முழுவதுமுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவுள்ளன. 

இதனை விமர்சித்து மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது.  திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.