அம்மாடியோவ் 92,000 க்கு மதுவாங்கி குவித்த குடிமகன் : ஒரே நாளில் ரூ. 45 கோடி வசூல்!

 

அம்மாடியோவ் 92,000 க்கு மதுவாங்கி குவித்த குடிமகன் : ஒரே நாளில் ரூ. 45 கோடி வசூல்!

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. 

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.  குறிப்பாக ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. 

ff

இந்நிலையில் மாநில அரசுகள் நிதிதேவையை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று முதல் மதுபான கடைகளை திறந்துள்ளது. கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மதுவாங்கி சென்றனர்.

tt

அதில் பெங்களூரில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் தனி நபர் ஒருவர் ரூ.52,841க்கு மதுபானங்களை வாங்கியுள்ளார். டாலர்ஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள மற்றொரு மதுபானக்கடையில் தனிநபர் ஒருவர் ரூ.95,347க்கு மதுபாட்டில்களை வாங்கி குவித்துள்ளார்.  இதற்கான பில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் முதல் நாளே 45 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.