அம்பானி வீட்டு விசேஷத்தில் வேலை செய்த அமிதாப், ஆமீர் கான்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

 

அம்பானி வீட்டு விசேஷத்தில் வேலை செய்த அமிதாப், ஆமீர் கான்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில்  அமீர் கான், அமிதாப் பச்சான் ஆகியோர் உணவு பரிமாறிய  வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

மும்பை: முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில்  அமீர் கான், அமிதாப் பச்சான் ஆகியோர் உணவு பரிமாறிய  வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் ஆடம்பரமாக நடைபெற்றது.

isha ambani

இந்த திருமண நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப், மத்திய அமைச்சர் ராஜ்நாத் மற்றும் சச்சின், அமிதாப், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இஷா அம்பானியின் திருமணச் செலவு சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அன் டிலா பங்களா அமைந்துள்ள வீதி முதற்கொண்டு வண்ண விளக்குகள், மலர் அலங்காரங்களால் ஜொலித்தன. 

இந்நிலையில் கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமீர் கான், அமிதாப் பச்சான் ஆகியோர் உணவு பரிமாறிய  வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அம்பானி வீட்டு திருமணம் என்பதால் பிரபலமான ஸ்டார்களே உணவு பரிமாறியுள்ளனர் என்று சிலர் விமர்சிக்க,  அம்பானி மீதுள்ள அன்பு மற்றும் மரியாதையால் தான்  அவர்கள் உணவு பரிமாறினார்கள் என்று அவர்களது ரசிகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.