அம்பானி காட்டில் பண மழை! ரூ.11,640 கோடி லாபத்தை கொடுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்….

 

அம்பானி காட்டில் பண மழை! ரூ.11,640 கோடி லாபத்தை கொடுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்….

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.11,640 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெட்ரோலிய பொருட்கள் முதல் தொலைத்தொடர்பு துறை வரை பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. அம்பானி தொட்டதெல்லாம் வெற்றி என்பதுபோல் அவர் நடத்தும் எல்லா வர்த்தகங்களும் அவருக்கு லாபத்தை அள்ளி கொடுக்கின்றன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.11,640 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் (2018 அக்டோபர்-டிசம்பர்) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபமாக ரூ.10,251 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. ஆக, கடந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மேலும், ஒரு காலாண்டில் அதிக நிகர லாபம் சம்பாதித்த தனியார் நிறுவனம் என்ற தனது முந்தைய சாதனையையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முறியடித்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11,262 கோடியாக இருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நுகர்வோர் மற்றும் தொலைத்தொடர்பு வர்த்தகங்கள் நல்ல முன்னேற்றம் கண்டதே லாபம் உயர்ந்தற்கு முக்கிய காரணம்.

ஜியோ

கடந்த டிசம்பர் காலாண்டில் முகேஷ் அம்பானி நிறுவனத்தின் ஒட்டு மொத்த செயல்பாட்டு வருவாய் 1.4 சதவீதம் குறைந்து ரூ.1.68 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.1,350 கோடியை சம்பாதித்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் 3.71 கோடி இணைப்புகளை வழங்கியுள்ளது.