அம்பானியை கடனில் இருந்து காப்பாற்றும் சவுதி அராம்கோ……உலகிலேயே மிகவும் லாபகரமான கம்பெனி அதுதாங்க…

 

அம்பானியை கடனில் இருந்து காப்பாற்றும் சவுதி அராம்கோ……உலகிலேயே மிகவும் லாபகரமான கம்பெனி அதுதாங்க…

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், உலகிலேயே மிகவும் லாபகரமான கம்பெனி என்ற பெருமையை சவுதியின் அராம்கோ நிறுவனம் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான சவுதி அரேபியன் எண்ணெய் நிறுவனம் (சவுதி அராம்கோ) உலகிலேயே மிகவும் லாபகரமான நிறுவனம் என்ற பெருமை உண்டு. பெட்ரோலிய ஏற்றுமதி வர்த்தகத்தில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் மிகப்பெரிய நிறுவனம் இது. இந்நிறுவனம் கொடுக்கும் அதிக வரி மற்றும் டிவிடெண்டுகளை நம்பித்தான் சவுதி அரசு காலம் தள்ளுகிறது. 

கச்சா எண்ணெய் உற்பத்தி

கடந்த சில தினங்களுக்கு முன்பு அராம்கோ நிறுவனம் முதல் முறையாக அரையாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு (ஜனவரி-ஜூன்) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்தததால் அந்நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. இருப்பினும், ஆப்பிள், அமேசான் மற்றும் இதர பெரிய எண்ணெய் நிறுவனங்களை எளிதாக பின்னுக்கு தள்ளி சர்வதேச அளவில் அதிக லாபகரமான நிறுவனம் என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

முகேஷ் அம்பானி

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் அராம்கோ நிறுவனம் சுமார் ரூ.3.32 லட்சம் கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது 12 சதவீதம் குறைவாகும். அராம்கோ நிறுவனம் முதல் 6 மாத காலத்தில் ரூ.3.29 லட்சம் கோடியை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டாக கொடுத்து விட்டது. இதில் 20 சதவீதம் நிறுவனத்தின் உரிமையாளரான சவுதி அரசுக்கு சிறப்பு பேஅவுட் வழங்கியதும் அடங்கும்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் 20 சதவீத பங்குகளை அராம்கோ நிறுவனம் வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொறுப்புகளை (கடன்களை) குறைக்கும் நோக்கில் முகேஷ் அம்பானி எடுத்துள்ள நடவடிக்கையில் இதுவும் ஒன்று.