அம்பத்தூரில் ஒரு அதிசயம்..! அதிகாலையில் நான் வெஜ் ப்ரேக் ஃபாஸ்ட்..!

அம்பத்தூரில் ஒரு அதிசயம்..! அதிகாலையில் நான் வெஜ் ப்ரேக் ஃபாஸ்ட்..!

நம்புவது கடினம்தான்,நாளைக் காலை அம்பத்தூர் கிறைஸ்ட் சர்ச் அருகே,அல்லது அம்பத்தூர் காவேரி டெக்ஸ்டைல்ஸ் அருகே போய் ‘ தமிழகம் மெஸ் ‘ என்று கேட்டுப்பாருங்கள் , ‘அருகில்தான் இருக்கிறது’ என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்.

food

இளைய தலைமுறையினர் தொடங்கி இருக்கும் நவீன உணவகம்தான். ஆனால்,எல்லா காலத்திலும் கொண்டாடப்பட்ட தமிழக நான் வெஜ் உணவுகள் அதே நாட்டுப்புறச் சுவையுடன் தரப்படுகிறது இங்கே. ஏ.சி,நான் ஏ.சி என்று இரண்டு சாப்பாட்டு அறைகள்.மதியம் சைவ சாப்பாடும் உண்டு,90 ரூபாய். அசைவ சாப்பாடு 110 ரூபாய். வெள்ளாட்டு கறியில் செய்யப்படும் மட்டன் பிரியாணி 200 ரூபாய்.சிக்கன் பிரியாணி 140 ரூபாய்.இங்கே காலை பிரேக் ஃபாஸ்ட்தான் ஸ்பெஷல்.

காலை 7 மணிக்கு,இட்டிலி மீன் குழம்பு,இடியாப்பமும் கொ

dosa

திக்கும் ஆட்டுக்கால் பாயாவும் மொறு மொறு தோசையுடம் பெப்பர் தூக்கலாகப் போட்ட போட்டி,என்று வரிசை வரிசையாக வருகின்றன. இவற்றோடு,ஆம்லெட் ஆஃப் பாயில்களும் உண்டு. போட்டிக்கு தருகிற தோசைக்குப் போட்டியாக சிக்கன் கறிதோசை,மட்டன் கறிதோசைகளும் உண்டு.

food

மட்டன் பிரியாணிக்கு இங்கே வெள்ளாட்டுக் கறி மட்டுமே பயன்படுத்துகிறார்கள். செம்மரி ஆட்டுக்கு நோ என்ட்ரி  என்கிறார்கள்.
முட்டை லாப்பா என்று ஒரு ஐட்டம் தருகிறார்கள். வெளியே கிரிஸ்ப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும் லாப்பாவை கூட எதையும் வைத்துக்கொள்ளாமல் தனியாகவே சாப்பிடலாம்.

aap

அடுத்தது பன்புரோட்டா !. இவர்கள் தருகிற அந்த வெள்ளாட்டுக் கறிகுழம்பிலோ,சூடான ஆட்டுக்கால் பாயாவிலோ ஒரு கரண்டி எடுத்து அந்த பன் பரோட்டாவின் தலையில் ஊற்றினால் ஒரே நிமிடத்தில் அது ஊறி ஃபன் பரோட்டாவாக ஆகி விடுகிறது. நீங்கள் புகுந்து விளையாடலாம்.அந்தப் பக்கம் போனால் மிஸ் பண்ணிடாதீங்க.