அமைதியை தொலைத்து ராணுவத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் ஜம்மு மக்கள்!

அமைதியை தொலைத்து ராணுவத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் ஜம்மு மக்கள்!

ஜம்மு காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை மத்திய அரசு நீக்குவதாக அறிவித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் ஜம்மு காஷ்மீர் பகுதி முழுவதும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
jammu

இதனால் அலுவலகம் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஸ்ரீ நகர், தோடா என பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கின்றன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.