அமைதிப்பூங்காவான தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் கமல்” – அமைச்சர் ஜெயகுமார்!!

 

அமைதிப்பூங்காவான தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் கமல்” – அமைச்சர் ஜெயகுமார்!!

இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் ஒரு அரசியல் நாகரீகம் அற்றவர். அமைதிப்பூங்காவான தமிழகத்தில் மதக்கலவரம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் ஒரு அரசியல் நாகரீகம் அற்றவர். அமைதிப்பூங்காவான தமிழகத்தில் மதக்கலவரம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்கள் நிறைந்துள்ள பகுதியில் தனது கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் “இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான். அது நாதுராம் கோட்சே என்பது உலகம் அறிந்த உண்மை” என பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் இருந்து இவருக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள், கண்டனங்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் இந்த சர்ச்சை பேச்சுக்கு மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தீவிர விமர்சனத்தை முன் வைத்தார். அவர் பேசியதாவது, “முதலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் பற்றி பேச விரும்புகிறேன். பேரறிவாளன் உட்பட அந்த ஏழு பேரையும் தமிழக மக்களின் விருப்பப்படியே நாங்கள் விடுவிக்க வேண்டுமென தான் விரும்புகிறோம். அனைத்துமே ஆளுநர் கையில்தான் உள்ளது. மக்கள் மனதை புரிந்து கொண்டதால் தான் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டசபையில் தீர்மானம் மேற்கொண்டு, அவர்களின் விடுதலைக்காக ஆளுநரின் பார்வைக்கு கொண்டு சென்றோம்.”

kamal

” கமல் இன்றைய இளைஞர்களின் மனதில் விஷச் செடிகளை நட முடிவு செய்து, முதல் ஆயுதமாக மதக்கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார். அரவக்குறிச்சியில் அவர் பேசிய பேச்சு அனைவரும் கேட்டு இருப்பர். அனைவருக்கும் சம நிலை என விரும்புபவர் எதற்கு மதக் கலவரத்தை உண்டு பண்ணும் விதமாக மதங்களைப் பற்றி பேச வேண்டும். அமைதிப்பூங்காவான தமிழகத்தில் கமலஹாசன் இப்படிப் பேசியது சற்றும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அரசியல் நாகரீகம் தெரிந்திருந்தால் அவர் இப்படி பேசியிருக்க மாட்டார்” என்றார்.

மேலும், அதிமுக விலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சென்ற அனைவரும் அதிமுக விற்கு திரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை. மக்கள் நலன் கருதி செயல்படும் ஒரே கட்சி அதிமுக தான் என புரிந்து கொண்டு வருவார்கள் என கூறினார்.