அமைதிக்கு தூதுவிடும் இம்ரான் கான்; நாளை அபிநந்தன் விடுதலை

 

அமைதிக்கு தூதுவிடும் இம்ரான் கான்; நாளை அபிநந்தன் விடுதலை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமைதியை நிலைநாட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வெளியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன்வர வேண்டும் என பாகிஸ்தான்பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.

அபிநந்தனை சித்ரவதை செய்யாமல் நல்ல முறையில் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி அபிநந்தன் தாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டதற்கு இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவித்தது. அபிநந்தன் கைது செய்யப்பட்டது இந்திய மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அபிநந்தனுக்கு விடுதலை வழங்க முடிவு செய்திருக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம், போர் தொடுக்க வேண்டும் என்று பொங்கிக் கொண்டிருந்தவர்களை வாயடைக்க செய்திருக்கிறார் இம்ரான் கான். மொபைல் மூலம் கூட அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த தயார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.