அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதம் குறித்துப் பேசியது தவறு : கனிமொழி குற்றச்சாட்டு..!

 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதம் குறித்துப் பேசியது தவறு : கனிமொழி குற்றச்சாட்டு..!

அவரிடம், இஸ்லாமிய மக்கள் ரேஷன் கடையை குறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரிடம், இஸ்லாமிய மக்கள் ரேஷன் கடையை குறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதனை வாங்க மறுத்த அமைச்சர், ‘ முஸ்லீம்கள் தான் அதிமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டிங்களே, பிறகு எதற்கு இந்த மனுவை என்னிடம் கொடுக்கிறீர்கள் என்றும் முஸ்லீம்களின் 6 சதவீத வாக்கை வைத்துக் கொண்டு நாக்கை வழிப்பதா’ என்று தரக்குறைவாகப் பேசியுள்ளார். இதனை அனைத்து முஸ்லீம் இன மக்களும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தனர். 

Minister Rajendra balaji

இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஒரு மதம் குறித்துப் பேசியது தவறு என்றும் ஆட்சியில் இருக்கும் போதே இவ்வாறு பேசியது மிகவும் தவறானது என்றும் கூறியுள்ளார். மேலும், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, காங்கிரஸ் வெற்றி பெரும் என்றும் கூறியுள்ளார்.