அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை வழிமொழிந்த அமெரிக்க அதிபர்..

 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை வழிமொழிந்த அமெரிக்க அதிபர்..

ஈரான் தான் பயங்கரவாத நாடு என்று டிரம்ப் கூறிய டிரம்ப பாகிஸ்தானை பற்றி என்ன சொல்லுவீர்கள் என்று கேட்டதற்கு ” அது குறித்து மோடியே விளக்கமளிப்பார்” என்றார்.

ஐநா சபையின் 74 ஆவது பொதுக்கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் மோடி டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை அடுத்து நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் ” இந்தியாவிக்கும் அமெரிக்கவுக்கும் இடையே உள்ள  நட்புறவு பலமானது. இந்தியா தற்போது சீராக இருப்பதற்கு  மோடியே காரணம். அவர் முந்தைய அரசை விட நாட்டை சிறப்பாக  வழிநடத்துகிறார். ஆகவே இந்தியாவியன் தந்தை மோடி தான்”, என்றார்.ஏற்கனவே பல மேடைகளில் இந்தியாவின் டாடி எங்கள் மோடி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.அவர் பேசிய சத்தம் அமெரிக்காவரை கேட்டிருக்கும் போல… அதிபர் ட்ரம்ப் அப்படியே வழிமொழிந்திருக்கிறார்!

மோடி டிரம்ப சந்திப்புஇதனைத் தொடர்ந்து ஈரான் தான் பயங்கரவாத நாடு என்று டிரம்ப் கூறிய டிரம்ப பாகிஸ்தானை பற்றி என்ன சொல்லுவீர்கள் என்று கேட்டதற்கு ” அது குறித்து மோடியே விளக்கமளிப்பார்” என்றார்.

இந்தியா அமெரிக்க உறவு பலமாக உள்ள நிலையில் கூடிய விரைவில் இருநாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்பது குறிப்பிடத்தக்கது.