அமைச்சர் பாண்டிய ராஜன் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

 

அமைச்சர் பாண்டிய ராஜன் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனைக் கண்டித்து திமுக  உறுப்பினர்கள் மற்றும் கழக தொண்டர்கள் அமைச்சர் பாண்டிய ராஜனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாண்டிய ராஜனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று மு.க ஸ்டாலின் அவரது கட்சி தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார்.

 

Minister ttn

அமைச்சர் பாண்டிய ராஜனை எதிர்த்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுவதால், அவரின் பாதுகாப்பு கருதி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.