அமைச்சர் பங்களாவை காலி செய்ய மறுக்கும் மணிகண்டன்! – எடப்பாடி அரசின் பாரபட்சம்

அமைச்சர் பங்களாவை காலி செய்ய மறுக்கும் மணிகண்டன்! – எடப்பாடி அரசின் பாரபட்சம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது. உடனடியாக அவர்களின் எம்.எல்.ஏ அறைகள் பூட்டப்பட்டன. மிகவும் நேர்மையாகவும் காராகவும் நடந்துகொள்வது போன்று நாடகம் நடத்தப்பட்டது.

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அமைச்சர் பங்களாவை காலி செய்ய மறுத்துவரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது. உடனடியாக அவர்களின் எம்.எல்.ஏ அறைகள் பூட்டப்பட்டன. மிகவும் நேர்மையாகவும் காராகவும் நடந்துகொள்வது போன்று நாடகம் நடத்தப்பட்டது.
ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் தூக்கப்பட்டுப் பல மாதங்கள் ஆன நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர் பங்களா இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி உள்ளது.

eps

தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசு பங்களாக்கள் உள்ளது.அமைச்சர் பதவி வகிக்கும் வரை அவர்கள் அந்த பங்களாக்களில் வசிக்கலாம். பதவியை விட்டு இறங்கியதும் உடனடியாக அவர்கள் அந்த பங்களாவை காலி செய்ய வேண்டும். தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் அமைச்சர் மணிகண்டனுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதலில் மணிகண்டன் பதவி பறிபோனது. 
அமைச்சர் பதவி பறிபோனதால் அவர் வகித்து வந்த அமைச்சர் பங்களாவை விட்டு அவர் வெளியேறியிருக்க வேண்டும். ஆனால், 6 மாதங்களுக்கு மேலாக அவர் அந்த பங்களாவை பயன்படுத்தி வருகிறார்.தங்களுக்கு ஆகாதவர்கள் என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எடப்பாடி அரசு, அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் மட்டும் தூக்கத்தில் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.