அமைச்சர் தங்கமணியின் கருத்தைத் தவறாக வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கிய பிரபல செய்தி நிறுவனங்கள்!

 

அமைச்சர் தங்கமணியின் கருத்தைத் தவறாக வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கிய பிரபல செய்தி நிறுவனங்கள்!

தமிழகத்தில் மதுவிலை உயர்த்தியதால் தான் வருவாய் அதிகமாகக் கிடைத்துள்ளது. மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம். திமுக ஆட்சியில் கூட மது விற்பனை வருவாய் அதிகமாக இருந்தது” என்று கூறினார்.

பட்ஜெட் மீதான சட்டப்பேரவை கூட்டத்தொடர் 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போது திமுக எம்.எல்.ஏ மனோ தங்கராஜ், மதுக்கடைகளை அரசு மூடுவதாகக் கூறியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மதுவால் வருவாய் அதிகமாகக் கிடைப்பதாக கூறுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, ” தமிழகத்தில் மதுவிலை உயர்த்தியதால் தான் வருவாய் அதிகமாகக் கிடைத்துள்ளது. மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம். திமுக ஆட்சியில் கூட மது விற்பனை வருவாய் அதிகமாக இருந்தது” என்று கூறினார்.

ttn

இதனைப் பிரபல செய்தி நிறுவனங்களான நியூஸ் 18 தொலைக்காட்சியும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும், தான் சொல்லாத ஒன்றைச் செய்தியாக வெளியிட்டதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். அதாவது, மது குடிப்பவர்கள் அதிகரித்ததால் தான் வருவாய் அதிகரித்துள்ளது என்று தான் கூறியதாக அந்த தொலைக்காட்சிகள் செய்தியைப் பரப்பியுள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார். இதனால் உரிமை மீறல் கருத்துக்கள் காரணமாக அந்த இரண்டு தொலைக்காட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சார்பில் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்புவதாகச் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.