அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி… தெர்மகோலை மிஞ்சிய அட்ராசிட்டி..!

 

அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி… தெர்மகோலை மிஞ்சிய அட்ராசிட்டி..!

உள்ளாட்சி தேர்தல் வரை கட்சிக்காரர்கள், வாக்காளர்களை கட்சி நிர்வாகிகள் எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று பல்வேறு ஒத்திகைகளை பார்த்து வருகிறார்கள்.

மதுரை இட்லிக்கு தான் பேமஸ் என நினைத்தால் இப்போது பிரியாணிக்கும் பேமஸாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் வரை கட்சிக்காரர்கள், வாக்காளர்களை கட்சி நிர்வாகிகள் எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று பல்வேறு ஒத்திகைகளை பார்த்து வருகிறார்கள்.

அதில் ஒன்று தான் இந்த பிரியாணி சமாச்சாராம். மக்களிடம் மனுக்களை வாங்கும் அமைச்சர்கள் அதை படித்துகூட பார்க்காமல் வேகமாக காரில் ஏறி போறதுதான் வழக்கம். ஆனால், உள்ளாட்சி தேர்தல் வருவதால் அமைச்சர் செல்லூர் ராஜூ புது டெக்னிக்கை கையில் எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் மேடையில் நின்று மனுக்கள் வாங்குவது, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என திடீரென மக்கள் மீது பாசமழை பொழிகிறார்.udhay

மனுவை படிக்கிறாரோ இல்லையோ… மனு கொடுத்தவர்களிடம் மேடைக்கு பின்னால் பிரியாணி, தயிர் சாதம் வைச்சிருக்கோம். உட்கார்ந்து சந்தோஷமாக சாப்பிட்டுட்டு போங்க. உங்க மனு மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். பிரியாணியை மறக்காதீங்க என்று அன்போடு சொல்கிறாராம். 

அதுமட்டுமின்றி ‘அறுசுவை உணவு தயாராக இருக்கு. அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்’ என திருமண விழாவில் அழைப்பது போல ஒலிபெருக்கியிலும் அன்புக்கட்டளையிடுகிறாராம். தூங்காநகரம் முழுவதும் இதுபோலவே நடப்பதால் உள்ளாட்சி தேர்தல் வரை பிரியாணி நகரம் என அழைக்கணும் என்று சொல்லி சிரிக்கிறார்கள் அரசு அதிகாரிகள். அவர் பிரியாணி போடுவது தெர்மகோலை மிஞ்சிய அட்ராசிட்டியாக பார்க்கப்படுகிறது.