அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்!

 

அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்!

ஆய்வு மேற்கொள்ளச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வருமானமில்லாமல் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலியை நம்பிப் பிழைக்கும் மக்கள் கிட்டத்தட்ட 44 நாட்களாக வீட்டிலேயே இருப்பதால், உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அதனால் ரூ.1000 பணம், நிவாரண பொருட்கள் என அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதே போல குறைந்த விலையில் உணவளிக்க அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், ஒரு சில இடங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ttn

மதுரை செல்லூர் பகுதியில் கொரோனா பாதுக்கப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கூடிய மக்கள் அவரிடம் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்கு அமைச்சர் பதில் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்ததாக தகவல் வெளியாகின்றன.