அமைச்சர் கருப்பண்ணன் பதவி பறிப்பா?

 

அமைச்சர் கருப்பண்ணன் பதவி பறிப்பா?

ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் கருப்பண்ணனுக்கும் பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே நிலவி வரும் கோஷ்டி பூசல் பிரபலம். இதன் காரணமாக உள்ளாட்சி மறைமுக தேர்தல்களில் தோப்பு வெங்கடாசலத்தின் ஆட்கள் வெற்றி பெறுவதைத் தடுக்க எதையும் செய்யும் மனநிலைக்கு வந்துவிட்டாராம் அமைச்சர் கருப்பண்ணன்.

ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் கருப்பண்ணனுக்கும் பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே நிலவி வரும் கோஷ்டி பூசல் பிரபலம். இதன் காரணமாக உள்ளாட்சி மறைமுக தேர்தல்களில் தோப்பு வெங்கடாசலத்தின் ஆட்கள் வெற்றி பெறுவதைத் தடுக்க எதையும் செய்யும் மனநிலைக்கு வந்துவிட்டாராம் அமைச்சர் கருப்பண்ணன். ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்தில் மொத்த உறுப்பினர்கள் 12. இதில் அதிமுக 5 இடங்களிலும் திமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

local

மீதி உள்ள 4 இடங்களில் அதிருப்தி அதிமுகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். அந்த அதிருப்தி உறுப்பினர்கள் 4 பேரில் ஒருவரை ஒன்றியக் குழு தலைவராக்க அமைச்சர் கருப்பண்ணன் முயற்சித்தாராம். இதை சரியான சமயத்தில் கண்டுபிடித்துவிட்ட தோப்பு வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள் பெருந்துறை 7வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினரான சாந்தி என்பவரை ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுத்து விட்டார்கள்.

karupanana

இதைத் தொடர்ந்து தோப்பு வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கருப்பண்ணனை நீக்க வேண்டும், இல்லாவிட்டால் அடுத்து நடக்கவிருக்கிற நகராட்சி மாநகராட்சி தேர்தல்களில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று புகாரளித்திருக்கிறார்கள்.

thoppu

ஏற்கனவே இதே தோப்பு வெங்கடாசலத்தோடு மோதியதால் தான் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியைப் பறித்தார் எடப்பாடி,அதனால் அமைச்சர் கருப்பண்ணன் பதவி தப்பாது என்று தோப்பு வெங்கடாசலத்தின் அணியினரும்,மணிகண்டன் ராமநாதபுரத்துக்காரர்,ஆனால் கருப்பண்ணன் கொங்குமண்டலத்துக்காரர்,அதனால் இதைக்கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம் என்று கருப்பண்ணன் தரப்பும் அடித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்களாம் ஈரோட்டில்.