அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அட்ராசிட்டி… அதிர வைக்கும் மறுபக்கம்..!

 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அட்ராசிட்டி… அதிர வைக்கும் மறுபக்கம்..!

அதிமுக அமைச்சர்களை பகைத்துக் கொண்டால் என்னவாகும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாம்பிள்…

அதிமுக அமைச்சர்களை பகைத்துக் கொண்டால் என்னவாகும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாம்பிள்… கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கூலநாயக்கன்பட்டி கிராமத்தின் ஒரு பகுதியில் வசிக்கும், ஒரு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் குடும்பத்தினர் கடந்த தேர்தலின்போது அதிமுகவிற்கு ஆதரவாக இல்லாமல், திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் அடிப்பொடிகள் போட்டு கொடுத்து விட்டனர். இதனால் கடுப்பான அமைச்சரின் கண்ணசைவில் அந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குடும்பத்துக்கு இடைஞ்சல் கொடுக்க அனுமதி கொடுத்தாராம். இதுதான் வாய்ப்பு என்று உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் பயணிகள் நிழற்கூரை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இந்த நிழற்கூரையை முன்னாள் அரசு ஊழியர் வீட்டு வாசலை மறைத்து சாலையோரம் அமைக்க அமைச்சர் வேலுமணி சிக்னல் கொடுத்துள்ளார். அதன்படி, பயணிகள் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வீடு, கடை, வணிக வளாகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றின் வாயிலை இடைமறித்து, பயணிகள் நிழற்கூரை அமைப்பது இல்லை. ஆனால், எனது வீட்டு வாயிலை வேண்டுமென்றே இடைமறித்து பயணிகள் நிழற்கூரை அமைத்துள்ளார்கள். இது பழிவாங்கும் நடவடிக்கை என அந்த முன்னாள் அரசு ஊழியர் புலம்பி தள்ளுகிறார்.