அமைச்சர்கள் வீரமணியும் சி.வி சண்முகமும் ஓரணியில்! பின்னணி ரகசியங்கள்; மோடி வழியில் எடப்பாடி!?

 

அமைச்சர்கள் வீரமணியும் சி.வி சண்முகமும் ஓரணியில்! பின்னணி ரகசியங்கள்; மோடி வழியில் எடப்பாடி!?

அமைச்சர் வீரமணி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சமீபத்தில் நடந்த ரைடுகள்,மோடி வழியில் எடப்பாடியும் இறங்கிவிட்டதை காட்டுவதாக வீரமணி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்

அமைச்சர் வீரமணி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சமீபத்தில் நடந்த ரைடுகள்,மோடி வழியில் எடப்பாடியும் இறங்கிவிட்டதை காட்டுவதாக வீரமணி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்!

வரும் பாராளுமன்ற தேர்தலின் போது வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட தேர்தல் செலவுகளை வீரமணிதான் ஏற்க வேண்டும் என்று எடப்பாடி சொன்னதாகவும், ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ள வீரமணி மறுத்துவிட்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அதைத் தொடர்ந்து, தனது நெருங்கிய உறவினர் ஒருவர் பெயரைச் சொல்லி, அவருக்கு சீட்டுக் கொடுத்தால் அந்த தொகுதியின் செலவை மட்டும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி இருக்கிறார்!

veeramani

அவரை மிரட்டுவதற்காக நடந்த ரெய்டுகள் தான் இவை என்கிறார்கள் வீரமணி ஆதரவாளர்கள். ஈபிஎஸ் ஓபிஎஸ் போல அரசியலுக்கு வந்து பணக்காரர் ஆனவரல்ல எங்கள் அமைச்சர். ஜோலார் பேட்டையில் பல தலைமுறையாகவே அமைச்சர் வீரமணியின் குடும்பத்தினர் வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர்கள் சீறுகிறார்கள்.

சி.வி சண்முகத்தின் கதை வேறு ரகம். சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் துவங்கிய காலத்தில் சி.வி சன்முகத்தின் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வீட்டில் கல்லெறிந்து தாக்குதல் நடத்துமளவுக்கு அப்போது  சசிகலா ஆதரவாளராக வலம் வந்தவர் சன்முகம்.

cvshanmugam

அவருக்கும் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் பல ஆண்டுகால பகை இருக்கிறது. அதன் துவக்கம் நிகழ்ந்தது 2006-ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி நடந்த சம்பவம். அன்று முருகம்பாக்கத்தில், தி.மு.க, அ.தி.மு.க தொண்டர்களிடையே நடந்த மோதலை கேள்விப்பட்ட சன்முகம், மோதல் நடந்த இடத்துக்கு வந்து ‘எவனா இருந்தாலும் நேரா வந்து மோதுங்கடா’ என்று சவால் விட்டு பேசினார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு, வீட்டுக்கு வந்து தனது சகோதரர்கள் ராதாகிருஷ்ணன், பாபு, பாபுவின் மைத்துனரும் அமைச்சரின் டிரைவருமான முருகானந்தம் ஆகியோருடன் சண்முகம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கே வந்த ஒரு கும்பல் அவர்கள் மேல் பீர் பாட்டில்களை வீசி உருட்டுக்கட்டை, அரிவாளுடன் தாக்குதல் நடத்தி இருக்கிறது. சண்முகம் அங்கே நின்ற ஒரு காரின் அடியில் புகுந்து படுத்து உயிர் தப்பினார்!

ramadoss, cvshanmugam

ஆனால் அவருடைய தம்பி பாபு பலத்த காயமடைந்தார். முருகாநந்தம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலை நடத்தச் சொன்னது பா.ம.க நிறுவனர் ராமதாசும், அவரது மகன் அன்புமணியும்தான் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சண்முகம்.

அந்த புகாரில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ராமதாஸின் மருமகன் பரசுராமன், வேட்பாளர் கருணாநிதி ஆகியோர் மீது குற்றம் சாட்டி இருந்தார். அந்த வழக்கின் எண் 164/2006. அதற்கு பிறகு பா.ம.க, அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோதிலும், அன்றைய முதல்வர் ஜெயலலிதா வழக்கை வாபஸ் பெறும்படி சண்முகத்திடம் சொல்லவில்லை. அந்த வழக்கு இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

இதனால் சி.வி சண்முகத்துக்கும் டாக்டர் ராமதாசுக்கும் இடையே பகை புகைந்து கொண்டேதான் இருக்கிறது. கடந்த.2011-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் சன்முகம் அமைச்சராக இருந்தபோதே காரில் அத்துமீறி நுழைந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. அதில் அங்கே இருந்த அமைச்சரின்  பாதுகாவலர் காயமடைந்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 10-ம் தேதியன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே இருக்கும் அமைச்சரின் அலுவலகத்தை ஒரு கும்பல் சூறையாடியது. இந்தச் சம்பவங்கள் எல்லாமே பா.ம.க-வினரால் நிகழ்த்தப்பட்டவையே என்று அமைச்சரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதனால்,பா.ம.க-வுடனான் கூட்டணியை கடுமையாக எதிர்க்கிறார் சண்முகம். தைலா புரத்தில் நடைபெறும் விருந்துக்கு சண்முகத்தை அழைத்துவந்து அவருக்கும் ராமதாசுக்கும் சமாதானம் செய்து வைக்க போகிறாராம் எடப்பாடி. இதற்கு சண்முகம் ஒப்புக்கொள்வாரா இல்லை தேர்தலின்போது உள்ளடி வேலைகளில் ஈடுபடுவாரா என்று விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க மற்றும் பா.ம.க-வை சேர்ந்த இரண்டு கட்சியினருமே குழப்பத்தில் இருக்கிறார்கள்!