அமைச்சர்கள் சிவி சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் அதிரடி நீக்கம்

 

அமைச்சர்கள் சிவி சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் அதிரடி நீக்கம்

அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

சென்னை: அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் க.பொன்னுசாமியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.பி.யும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அதிமுக அமைப்பு செயலாளராக ஆர்.லட்சுமணன் எம்.பி.யும், கொள்கை பரப்பு துணை செயலாளராக க.பொன்னுசாமியும், ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக ஆர்விஎன் கண்ணனும், துணை செயலாளராக கே.சேதுராமானுஜமும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளராக பி.கருணாகரனும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சிவிசண்முகமும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என கூறியுள்ளனர்.