அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் போராடவில்லை: தம்பிதுரை புது விளக்கம்

 

அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் போராடவில்லை: தம்பிதுரை புது விளக்கம்

அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் போர்வையில் எதிர்க்கட்சியினர் போராடுகின்றனர் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர்: அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் போர்வையில் எதிர்க்கட்சியினர் போராடுகின்றனர் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

கஜா புயல் பாதிப்பு நிவாரண பணியில் அரசு ஒழுங்காக ஈடுபடவில்லை என கூறி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நல்ல பெயர் எடுத்த தமிழக அரசு மீட்பு பணியில் அந்த பெயரை கோட்டை விட்டுள்ளது. ஆனால் பொதுமக்களை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுகிறார்கள் என அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், மு.க.ஸ்டாலின் ஆரம்பத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறிவிட்டு, தற்போது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும்போது தனது கட்சிக்காரர்களை போராட தூண்டி விட்டுள்ளார் என்றார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். புயல் பாதித்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்யும் போது பொதுமக்கள் என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்.பெட்டி சாவி மத்திய அரசின் கையில் உள்ளது, அவர்கள் பெட்டியை திறந்தால் தான் தமிழகத்திற்கு நிதி கிடைக்கும் என்றார்.