அமேதியில் ராகுல் பின்னடைவு: காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

 

அமேதியில் ராகுல் பின்னடைவு: காங்கிரஸ் கட்சியினர்  அதிர்ச்சி!

ராகுல் காந்தியின் பிரதான தொகுதியான அமேதியில் அவர் பின்னடைவைச் சந்தித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ராகுல் காந்தியின் பிரதான தொகுதியான அமேதியில் அவர் பின்னடைவைச் சந்தித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

bjp

மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ள  நிலையில் இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது.  மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதே போல் தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக இருந்த  22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த முடிந்தது. 

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதில் 250க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 97 இடங்களிலும் மற்றவை 72 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

smirithi

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த முறை வெற்றி பெற்ற அமேதி தொகுதியிலும்,  கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் இந்த முறை போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் முன்னிலை வகித்து வரும் ராகுல் காந்தி,  அமேதியில்பின்னடைவை சந்தித்து உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்  ஸ்மிரிதி இரானி அவரை விட முன்னிலை வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.