அமேசான் ப்ரைமில் “பொன்மகள் வந்தாள்” : தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

 

அமேசான் ப்ரைமில் “பொன்மகள் வந்தாள்” : தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை. 

அறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.  இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை. 

இதனிடையே இந்தப் படத்தை நேரடியாக அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால்  திரையரங்கில் இப்படம் வெளியாகாது என்பது தெளிவாகியுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க  உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் ஆர். பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  2D நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவர இருந்த பொன்மகள் என்ற திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக OTT Platformல் வெளிவரப்போவதாக செய்தி வந்தது.

tt

மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.  தொடர்பு கொண்ட போது தயாரிப்பாளர் நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை. ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platformல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் முடிவால் சம்மந்தபட்ட படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.