அமேசான் தளத்தில் ஓப்பன் சேல் விற்பனைக்கு அறிமுகம் ஆனது ரியல்மி யு1 ஸ்மார்ட்போன்

 

அமேசான் தளத்தில் ஓப்பன் சேல் விற்பனைக்கு அறிமுகம் ஆனது ரியல்மி யு1 ஸ்மார்ட்போன்

ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஓப்பன் சேல் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது.

டெல்லி: ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஓப்பன் சேல் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது.

கடந்த மாதம் அறிமுகமான ரியல்மி யு1 பிரத்யேகமாக அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகம், மீடியாடெக் ஹீலியோ பி70 SoC பிராஸசர் மற்றும் நாட்ச் டிஸ்பிளே, டூயல் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல்  (டிசம்பர் 17) ஓப்பன் சேலில் விற்பனைக்கு அறிமுகம் ஆனது.

அதாவது, இனி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து பிளாஷ் சேலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும், அமேசான் மற்றும் ரியல்மி வலைதளங்களில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளாலாம்.

இந்தியாவில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகம் கொண்ட ரியல்மி யு1ன் விலையானது, ரூ.11.999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகம் கொண்ட மாடலின் விலை ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது. இதில் டூயல் கேமரா செட்டப் உள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. ஸ்போர்ட்ஸ் டிஸ்பிளே கொண்ட 6.3 இன்ச் திரை கொண்டுள்ளது. இதன் நினைவகத்தை மைக்ரோ sd கார்டு கொண்டு 256 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

கேமராவை பொறுத்தவரையில், பின்பக்கம் டூயல் கேமரா கொண்டுள்ளது 13 மெகா பிக்செல்ஸ் பிரைமரி சென்சார் f/2.2 அப்பர்ச்சர் எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது. முன்பக்கம் 25 மெகா பிக்செல்ஸ் கொண்டுள்ளது.