“அமேசான் காடுகளுக்கு நாங்களே சொந்தக்காரர்கள்” – அமெரிக்காவில் பிரேசில் அதிபர் காட்டமான பேச்சு!!

 

“அமேசான் காடுகளுக்கு நாங்களே சொந்தக்காரர்கள்” – அமெரிக்காவில் பிரேசில் அதிபர் காட்டமான பேச்சு!!

அமேசான் மழைக்காடுகள் எங்களுக்குச் சொந்தமானவை. அதை சீரழிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என ஐநா பொதுக்கூட்டத்தில் பிரேசில் அதிபர் காட்டமான பேச்சினை வெளியிட்டார்.

அமேசான் மழைக்காடுகள் எங்களுக்குச் சொந்தமானவை. அதை சீரழிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என ஐநா பொதுக்கூட்டத்தில் பிரேசில் அதிபர் காட்டமான பேச்சினை வெளியிட்டார்.

கடந்த மாதம் அமேசான் மழைக்காடுகளில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான மரங்கள் மற்றும் உயிரினங்கள் தீக்கிரையாகின. பூமியின் நுரையீரலாக கருதப்பட்டு வரும் அமேசான் காடுகளில் தீ விபத்து ஏற்பட்டதால் சுற்றுச்சூழல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக உலக மக்களின் 20 சதவீதம் ஆக்சிஜன் தேவையை அமேசான் மழைக்காடுகளே பூர்த்தி செய்து வருகின்றன. இதன் காரணமாகவே இத்தகைய பதற்றம் உலக மக்களுக்கு ஏற்பட்டது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்தி மரங்களையும் உயிரினங்களையும் காக்க வேண்டுமென பிரபலங்கள் பலர் குரல் கொடுத்து வந்தனர். 

 அமேசான் காடு

சமூக ஆர்வலர்கள் பிரேசில் அதிபர் தனது சொந்த நோக்கிற்காக காடுகளை சூறையாடி வருகிறார். தொழிற்சாலை துவங்கும் நோக்கத்தில் காடுகள் பல அழிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற 75ஆவது ஐநா பொது கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரேசில் அதிபர் போல்சனரோ கூறுகையில், அமேசான் காடுகள் ஒருபோதும் உலக மக்களின் நுரையீரலாக இருக்காது. அது பிரேசிலுக்கு சொந்தமானவை. மற்ற நாடுகள் இதற்கு சொந்தம் கொண்டாடுவது  முறைகேடானது. எங்கள் சொந்த நாட்டின் காடுகளை தீக்கு இரையாக்கியவது எங்கள் நோக்கம் இல்லை. மற்றவர்கள் எங்கள் மீது தவறான குற்றம் சாட்டுவது ஏற்றுக் கொள்ளப்படாது. சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமேசான் மழைக்காடுகளை நான் சூறையாடி வருகிறேன் என்பது உலக மக்களின் தவறான புரிதல். சமூக ஆர்வலர்கள் மக்களைத் தூண்டி விடும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். எனது சொந்த நாட்டில் மக்களுக்கு நான் செய்யும் செயல்கள் சரியாக புரிகிறது. ஆதலால் அவர்கள் என்னை ஊக்கப் படுத்துகிறார்கள். அவதூறுகளை நிறுத்திக்கொள்ளுங்கள் என காட்டமாக பேசினார்.