அமெரிக்க ஹெலிகாப்டர் ஆப்கன் மண்ணில் வீழ்ந்தது

அமெரிக்க ஹெலிகாப்டர் ஆப்கன் மண்ணில் வீழ்ந்தது

தாலிபான்களை வீழ்த்துவதற்கென்று அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் வந்திறங்கி இருபது வருடங்களாகப் போகிறது. பின்லேடனைக் கொன்று கடலில் வீசியும்கூட எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தலைதீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு வந்த முதல் மாப்பிள்ளை கணக்காக இன்னமும் ஆப்கானிஸ்தானை விட்டு கிளம்பாமல் டேரா போட்டுக்கொண்டிருக்கிறது அமெரிக்க படைகள்.

இன்னமும்கூட ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை பத்திரமாக ஓரிடத்தில் இருந்து இனோரு இடத்திற்கு கொண்டுசெல்வது மற்றும் சரக்கு போக்குவரத்திற்கென பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சினூக் வகை ஹெலிகாப்டர் ஒன்று இன்று தரையிரங்க முயற்சித்தபோது, கீழே விழுந்து நொறுங்கியது.

தாலிபான்களை வீழ்த்துவதற்கென்று அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் வந்திறங்கி இருபது வருடங்களாகப் போகிறது. பின்லேடனைக் கொன்று கடலில் வீசியும்கூட எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தலைதீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு வந்த முதல் மாப்பிள்ளை கணக்காக இன்னமும் ஆப்கானிஸ்தானை விட்டு கிளம்பாமல் டேரா போட்டுக்கொண்டிருக்கிறது அமெரிக்க படைகள்.

Chinook Helicopter

திரும்ப பயன்படுத்த முடியாத அளவுக்கு அந்த ஹெலிகாப்டர் நொறுங்கிவிட்டிருந்தாலும், அதில் பயணம் செய்த ஆப்கன் மற்றும் அமெரிக்க படையினருக்கு பெரிய அளவில் சேதாரம் ஏதுமில்லை. அதேநேரம், அந்த ஹெலிகாப்டர் தீவிரவாத செயலால் வீழ்த்தப்படவில்லை என்றும் அமெரிக்க செய்தி தொடர்பாளர் உறுதிபட தெரிவித்துள்ளார்.