அமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

 

அமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

சீனாவை விட்டு  அமெரிக்க நிறுவனங்கள்  வெளியேறுங்கள் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க சோயாபீன், நிலக்கடலை க்ரீம் உள்ளிட்ட சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு இறக்குமதி வரியை சீனா நேற்று அதிரடியாக அதிகரித்தது. இதனால் ஆவேசமடைந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்காவுக்குச் சீனா தேவையில்லை. இன்னும் வெளிப்படையாகக் கூறினால் சீன பொருட்கள் இல்லாமலே அமெரிக்கா நன்றாக இருக்கும். கடந்த பல ஆண்டுகளில் அமெரிக்க பல லட்சம் டாலர்களை சீனாவிடம் இழந்துள்ளது. சீனாவை நம்பி அமெரிக்கர்கள் முட்டாளாக இருந்துள்ளனர். லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள அமெரிக்கர்களின் அறிவுசார் சொத்துரிமையைச் சீனா திருடி விட்டது. இதை தொடர நான் விடமாட்டேன். சீனாவின் எண்ணம் ஈடேறாது.  அதனால் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி மாற்று இடத்தை தேட வேண்டும்  அமெரிக்கா திரும்பி வந்தும் பொருட்களைத் தயாரிக்கவும் பரிசீலிக்கலாம்’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

 

…unfair Trading Relationship. China should not have put new Tariffs on 75 BILLION DOLLARS of United States product (politically motivated!). Starting on October 1st, the 250 BILLION DOLLARS of goods and products from China, currently being taxed at 25%, will be taxed at 30%…
— Donald J. Trump (@realDonaldTrump) August 23, 2019

முன்னதாக கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. அதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிரடியாக அதிகரித்துள்ளது.