அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை  அருகில் சேர்க்கக் கூடாது… இங்கிலாந்து பத்திரிகைகள் எதிர்ப்பு

 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை  அருகில் சேர்க்கக் கூடாது… இங்கிலாந்து பத்திரிகைகள் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முதல் முறையாக இங்கிலாந்து வந்திருக்கிறார். நேற்றே பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் ட்ரம்ப் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் மோதிக்கொண்டனர்.
இப்போது,பிரபல பத்திரிகையான கார்டியன் தன் பங்குக்கு ட்ரம்ப்பை கிழித்து தொங்க விட்டிருக்கிறது.’எ மிஸ்டேக் ‘ என்கிற தலைப்பில் அந்த பத்திரிக்கையில் எழுதப்பட்டிருக்கும்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முதல் முறையாக இங்கிலாந்து வந்திருக்கிறார். நேற்றே பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் ட்ரம்ப் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் மோதிக்கொண்டனர்.
இப்போது,பிரபல பத்திரிகையான கார்டியன் தன் பங்குக்கு ட்ரம்ப்பை கிழித்து தொங்க விட்டிருக்கிறது.’எ மிஸ்டேக் ‘ என்கிற தலைப்பில் அந்த பத்திரிக்கையில் எழுதப்பட்டிருக்கும் தலையங்கத்தில் , ட்ரம்ப் இங்கிலாந்தையோ, ஜனநாயகத்தையோ மதிப்பவர் அல்ல. அவரை விலக்கி நிறுத்தி இருக்க வேண்டும். ராணியுடன் விருந்து வைத்திருக்க கூடாது என்கிறது.

donald trump

ட்ரம்ப் தொடர்ந்து இங்கிலாந்தின் தலைவர்களை,குறிப்பாக லண்டன் மேயர் சாதிக் கான் போன்றவர்களை  தொடர்ந்து தாக்கி வருகிறார். பிரிக்ஸ்ட் மூலம் இங்கிலாந்து தனித்து இயங்கினால் தன்னைப் போன்ற ஒரு வலதுசாரி இங்கும் பதவிக்கு வரலாம் என்கிற எதிர்பார்ப்பு அவருக்கு இருக்கிறது. அவர் ஒரு இனவெறியர் ,

theresa may

கடந்த ஆண்டு உலகப்போரின் 75 வது ஆண்டு விழாவுக்கு பாரிஸ் போகிற வழியில் இங்கு வந்த போதும் தெரசா மேவைத்தாக்கி பேசினார். ஃபிரான்சில் நடந்த நினைவுக்கூட்டத்திலும் அவர்களையும் அவமானப்படுத்தினார்.
அவர் இங்கிலாந்தை மட்டுமல்ல ,அமெரிக்காவின் எந்த நட்பு நாட்டையும் மதிப்பதில்லை. ஈரான் மீதான பொருளாதாரத் தடை, சிரியாவிலிருந்து படைகளை வாபஸ் பெற்றது என எல்லா முடிவுகளையும் அவர் தன்னிச்சையாகவே எடுத்தார். நட்பு நாடுகளின் கருத்தை அவர் மதிப்பதில்லை என்று கடுமையாக விமர்சித்திருக்கிறது.

donald trump

வெளி நாட்டுத்தலைவர்கள் வருகை தரும்போது அவர்களை ‘ காமன்ஸ்’ எனப்படும் இங்கிலாந்து பார்லிமெண்ட் கூட்டத்தில் பேச அழைப்பது மரபு. அப்படி ட்ரம்ப்பை பேச வைக்க பலமான லாபி நடந்தது. ஆனால், காமன்ஸ் சபையின் சபாநாயகர் ஜாந் பெர்க்கோவ் ட்ரம்பை அழைக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.