அமெரிக்க ஓபன்: ரபேல் நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!

 

அமெரிக்க ஓபன்: ரபேல் நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ரபேல் நடால்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ரபேல் நடால்.

ஒவ்வொரு ஆண்டும் வருட இறுதியில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இந்த ஆண்டும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் ஏற்கனவே, முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த சுமித் நாகலை வீழ்த்தி நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

rafale

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மற்றொரு முதல் சுற்று போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான் மில்மேனை எதிர்கொண்டார். துவக்கம் முதலே நடால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். அவரின் அதிரடியை சற்றும் பொறுக்க முடியாமல் அடுத்தடுத்து மூன்று நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவி ஆஸ்திரேலிய வீரர் வெளியேறினார். 

இதில் ரபேல் நடால் 6-3, 6-3 மற்றும் 6-2 என நேர் செட் கணக்கில் வென்றார். இந்த வெற்றிக்குப் பிறகு நேரடியாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

rafale

இதற்கு முன்னர் நடைபெற்ற மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவை சேர்ந்த வீரரான டாமிக் தியமை எதிர்த்து இத்தாலியைச் சேர்ந்த தாமஸ் போபியானா மோதினார். இதில் டாமிக் தியம் 6-4, 3-6, 6-3 மற்றும் 6-2 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.