அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு: 17-ஆவது ஆண்டு நினைவு தினம்

 

அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு: 17-ஆவது ஆண்டு நினைவு தினம்

அமெரிக்கா: நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 17-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு சொந்தமான நான்கு விமானங்களை கடத்தி அல்குவைதா பயங்கரவாதிகள், 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி உலக வர்த்தக மைய இரட்டை கோபுரத்தின் மீது மோத செய்தனர். மோதிய 2 மணி நேரத்துக்குள் கட்டடம் தரைமட்டமானது. இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும், வணிக மைய கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பலியாகினர். 

மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்தனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் பலியாகினர். கடத்தப்பட்ட நான்காவது விமானத்தில் பயணிகள் – பயங்கரவாதிகள் இடையே சண்டை நடந்தது. முடிவில் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் 40 பேர் பலியாகினர். இச்சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, உயிரிழந்தவர்கள் நினைவாக மண்டபமும், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டது. இந்த மாபெரும் இழப்பிலிருந்து அமெரிக்கா மீண்டு வந்தாலும், இன்றும் சரித்திரத்தில் மறக்க முடியாது தினமாக இருக்கிறது.