அமெரிக்க அதிபர் தேர்தலை டார்கெட் செய்யும் ஏஞ்சலினா ஜோலி?

 

அமெரிக்க அதிபர் தேர்தலை டார்கெட் செய்யும் ஏஞ்சலினா ஜோலி?

உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அடுத்த அமெரிக்க தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டன்: உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அடுத்த அமெரிக்க தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா அமைப்பின் அகதிகள் நல்லெண்ண தூதராக இருக்கும் ஏஞ்சலினா, பல்வேறு சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் பிபிசி-க்கு பிரத்யேக பேட்டியளித்த நடிகை ஏஞ்சலினாவிடம் அரசியல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு ஏஞ்சலினா அளித்த பதில் வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஏஞ்சலினா ஜோலி போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

angelinajolie

இது குறித்து பேசிய ஏஞ்சலினா, ‘இந்த கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால் சிரித்திருப்பேன். இப்போது அப்படியில்லை. சர்வதேச அளவில் உதவி தேவைப்படும் மக்களுக்காக உழைத்து வருகிறேன். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன்.

angelinajolie

எவ்வித பதவியிலும் இல்லாமல் மக்கள் சேவையாற்றி வருகிறேன். வெளிநாட்டு அரசாங்கத்துடனும், ராணுவத்துடனும் பணியாற்றி வருகிறேன். அரசியல்வாதியாகும் தகுதி இருக்கா என்பது தெரியாது. தேவை எங்கு இருக்கிறதோ கட்டாயம் அந்த இடத்திற்கு செல்வேன். அரசியல் ஆசை இல்லை என சொல்ல மாட்டேன். எனது வருகை மாற்றத்தை ஏற்படுத்துமானால் அதை கண்டிப்பாக செய்வேன்’ என ஏஞ்சலினா பதிலளித்தார்.