அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் சுந்தர் பிச்சை சந்திப்பு

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் சுந்தர் பிச்சை சந்திப்பு

கூகுள் தேடுபொறியில் தன்னைப் பற்றி ஒருதலைப்பட்சமாக செய்திகள்  வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்

வாஷிங்டன்: கூகுள் தேடுபொறியில் தன்னைப் பற்றி ஒருதலைப்பட்சமாக செய்திகள்  வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

கூகுள், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “டிரம்ப் செய்தி என்ற தேடல் வார்த்தைக்கு தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை கூகுள் தேடல் கொடுக்கிறது. இதில் வருகின்ற அனைத்து செய்திகளும் எனக்கு எதிராக உள்ளது. அமெரிக்காவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரபல செய்தி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் கூகுள் முன்னுரிமை அளிக்கிறது”  என அமெரிக்க அதிபர் பதிவிட்டிருந்தார். இதற்கு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் இன்க் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் லாரி குட்லாவ், அதிபர் டிரம்பை, கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை கடந்த வெள்ளிக் கிழமை சந்தித்தாகவும், அப்போது டிரம்பின் குற்றச்சாட்டு குறித்து போதுமான விளக்கத்தை சுந்தர் பிச்சை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.