அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் – காரணம் தெரியுமா?

 

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் – காரணம் தெரியுமா?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்பை நெட்டிசன்கள் பயங்கரமாக இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

அமெரிக்க நாட்டின் முதல் பெண்மணி (First Lady) மெலனியா டிரம்ப் மீண்டும் ஒருமுறை இணையத்தில் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். புதிய நவநாகரீக ஆடைகளை உடுத்துவதற்கு மெலனியா பிரபலமாக இருக்கிறார். ஆனால், இம்முறை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தோட்டத்தை பராமரிக்கும் புகைப்படங்கள் மூலமாக இணையத்தில் இவர் பேசுபொருளாகி இருக்கிறார்.

தோட்டத்தில் அவர் இருக்கும் புகைப்படங்களில் 4 இன்ச் ஹீல்ஸ் அணிந்திருப்பது தெளிவாக தெரிகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மெலனியாவை கலாய்த்து வருகின்றனர். ஹீல்ஸ் மூலம் குழி தோண்டி மரத்தை மெலனியா நட்டு வைத்தாரா? என்பது போல பல்வேறு கிண்டல் பதிவுகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மெலனியா குறித்து பதிவிட்டுள்ளனர்.