அமெரிக்க அதிபர்களில் என்னை விட சிறந்த நண்பரை இந்தியா பெற்றதில்லை- பெருமையாக சொல்லி கொண்ட டொனால்ட் டிரம்ப்

 

அமெரிக்க அதிபர்களில் என்னை விட சிறந்த நண்பரை இந்தியா பெற்றதில்லை- பெருமையாக சொல்லி கொண்ட டொனால்ட் டிரம்ப்

ஹவுடி மோடி நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர்களில் என்னை விட சிறந்த நண்பரை இந்தியா ஒரு போதும் பெற்றதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமையாக சொன்னார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக  அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுவதற்காக டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் பிரம்மாண்டமான ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்து கொண்டார்.

மோடி, டிரம்ப்

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், இந்தியா அமெரிக்காவில் இப்போது முதலீடு செய்வது போல் எப்போதும் முதலீடு செய்து இல்லை. இது ஒரு பரஸ்பரமானது. அதேபோல் நாங்களும் இந்தியாவில் செய்கிறோம். உலகின் சிறந்த பொருட்களை இந்தியர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

மோடி, டிரம்ப்

பிரதமர் மோடி, நம் நாடுகளை முன்பை விட வளமானதாக மாற்ற உங்களுடன் பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன். அதிபர் டொனால்ட் டிரம்பை காட்டிலும் உங்களுக்கு வெள்ளை மாளிகையில் சிறந்த நண்பர் ஒருபோதும் இருந்ததில்லை என்று பேசினார்.