அமெரிக்க அதிபரை வரவேற்க 100 கிலோ அளவில் “டிரம்ப், மோடி முகம் பதித்த இட்லி”.. அசத்திய சென்னை செஃப்!

 

அமெரிக்க அதிபரை வரவேற்க 100 கிலோ அளவில் “டிரம்ப், மோடி முகம் பதித்த இட்லி”.. அசத்திய சென்னை செஃப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியாவிற்கு வந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியாவிற்கு வந்தார். அவருடன் அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜேர்ட் குஷ்னர் ஆகியோரும் வருகை தந்தனர்.

ttn

முதன் முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் டிரம்ப்பை வரவேற்க ஏராளமான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவரின் வருகையை இந்தியாவே எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த நிலையில் பிரதமர் மோடி டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்றார். அதன் பின்னர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் தாஜ்மகால், சபர்மதி இல்லம் உள்ளிட்ட பல இடங்களைப் பார்வையிட்டனர். 

ttn

இந்நிலையில் அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாகச் சென்னையைச் சேர்ந்த செஃப் இனியவன் 100 கிலோ எடை கொண்ட உருவ இட்லியைச் செய்துள்ளார். மொத்தமாக மூன்று இட்லிகளைச் செய்த அவர், டிரம்ப்பின் முகம் பதித்த இட்லி, மோடியின் முகம் பதித்த இட்லி மற்றும் இந்தியா-அமெரிக்கா கொடிகளைப் பதித்த இட்லி எனச் செய்து அசத்தியுள்ளார்.

ttn

இதில் டிரம்ப் மற்றும் மோடியின் முகம் பதித்த இட்லி தலா 50 கிலோ எடை கொண்டதாம். மேலும், இதனை அவர் 6 நபர்களின் உதவியுடன் 36 மணி( ஒன்றரை நாள்) நேரத்தில் செய்து முடித்துள்ளார். 

ttn

இது குறித்துப் பேசிய செஃப் இனியவன், இரண்டு நாட்கள் இந்தியாவில் பயணம் செய்ய உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பதற்காகத் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவைத் தேர்ந்தெடுத்து இதனைச் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இப்போது அந்த இட்லி இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.