அமெரிக்க அதிபரை ட்ரம்பை பேட்டி எடுக்க விரும்பும் பிரபல தமிழ் பட நடிகர்! 

 

அமெரிக்க அதிபரை ட்ரம்பை பேட்டி எடுக்க விரும்பும் பிரபல தமிழ் பட நடிகர்! 

அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரபல தமிழ் நடிகர் சித்தார்த் நேர்காணல் செய்யவேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சென்னை: அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரபல தமிழ் நடிகர் சித்தார்த் நேர்காணல் செய்யவேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தமிழில் பாய்ஸ், ஆய்த எழுத்து, அவள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர்  சித்தார்த். மேலும் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழி படங்களிலும் நடித்துவருகிறார். சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் மற்றும் அரசியல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். மேலும் பாஜக கட்சியின் தீவிர எதிரியாகவே மாறி விட்டார். 

அந்தவகையில் தற்போது அவர் செய்த ஒரு விஷயம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.  தனது ட்விட்டர் பக்கத்தில் “டொனால்ட் ட்ரம்ப் அவர்களே, நீங்கள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள், நீங்கள் எப்படி தூங்குவீர்கள், உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இந்திய பாஸ்ப்போர்ட் இருக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார்.

அவருடைய பதிவுக்கு பலரும் நீங்கள் நடிகர் அக்‌ஷய் குமாரை டேக் செய்ய மறந்துவிட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

siddharth

முன்னதாக நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் மோடியை வைத்து ஒரு நேர்காணல் எடுத்திருந்தார். அதில் அரசியல் சார்ந்த கேள்விகள் எதுவும் கேட்காததால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை கலாய்க்கும் விதமாக நடிகர் சித்தார்த் இந்த பதிவை பதிவிட்டிருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.