அமெரிக்க அதிபரின் அழகு மகள் இவான்கா டிரம்ப் தனது மகளுக்கு சொல்ல விரும்பும் பியூட்டி டிப்ஸ்

 

அமெரிக்க அதிபரின் அழகு மகள் இவான்கா டிரம்ப் தனது மகளுக்கு சொல்ல விரும்பும் பியூட்டி டிப்ஸ்

38 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயான பின்பும் அழகு தேவதையாக ஜொலிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், தனது மகளுக்கு கட்டாயம் சொல்ல விரும்பும் பியூட்டி டிப்ஸ் குறித்து கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப். 38 வயதாகும் இவான்கா டிரம்ப் தனது வாழ்க்கையில் தாய், எழுத்தாளர், தொழிலதிபர் மற்றும் அமெரிக்க அதிபரின் (டிரம்ப்) மூத்த ஆலோசகர் என பல்வேறு ரோல்களை திறம்பட கையாண்டு வருகிறார். இவான்கா டிரம்ப் அண்மையில் பேட்டியில் ஒன்று அழகு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

இவான்கா டிரம்ப் தனது மகளுடன்

நம்பிக்கை, வலிமை மற்றும் கருணை ஆகியவைதான் ஒரு பெண்ணை உண்மையில் அழகாக ஆக்குகின்றன என்பதை எனது மகள் அரபெல்லாவுக்கு தெரிவிப்பது எனக்கு முக்கியமானது. ஒப்பனை மற்றும் தோல் பராமரிப்பு வேடிக்கையானது. நான் இளவயது பெண்ணாக இருந்தபோது, ஒருநாள் நள்ளிரவில் என்னை என் அம்மா எழுப்பி, முகத்தில் உள்ள மேக்கப்பை கழுவிவிட்டு படுக்கும்படி கூறினார். 

இவான்கா டிரம்ப் தனது தந்தை டொனால்ட் டிரம்புடன்

மேக்கப்புடன் உறங்குவது தோலுக்கு மிகவும் கெடுதல் என அவர் நினைத்தார். அதனை நானும் ஒப்புக்கொள்கிறேன். நான் கர்ப்பமாக இருந்தபோது மகிழ்ச்சியாக உணவு சாப்பிடவில்லை, உணவுகளின் ஊட்டச்சத்தின் மதிப்பை உணர்ந்து உட்கொண்டேன். அதனால் குழந்தை பெற்ற பிறகும் பழைய உடலமைப்புடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இவான்கா-ஜெரெட் குஷ்னர் தம்பதியனருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.