“அமெரிக்க அதிபராக என்னை தேர்ந்தெடுங்கள்…ப்ளூம்பெர்க் நிறுவனத்தை விற்று விடுகிறேன்!” – அந்நிறுவன அதிபர் அறிவிப்பு

 

“அமெரிக்க அதிபராக என்னை தேர்ந்தெடுங்கள்…ப்ளூம்பெர்க் நிறுவனத்தை விற்று விடுகிறேன்!” – அந்நிறுவன அதிபர் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தன்னை மக்கள் தேர்வு செய்தால் ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்று விடத் தயாராக இருப்பதாக அந்நிறுவன அதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தன்னை மக்கள் தேர்வு செய்தால் ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்று விடத் தயாராக இருப்பதாக அந்நிறுவன அதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மைக்கேல் ப்ளும்பெர்க்கும் களத்தில் உள்ளார். நியூயார்க் நகர முன்னாள் மேயராக அவர் ஏற்கனவே பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக தன்னை மக்கள் தேர்வு செய்தால் ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்று விடத் தயாராக இருப்பதாக அந்நிறுவன அதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க் தெரிவித்துள்ளார். அவருக்கு தற்போது 78 வயது ஆகிறது.

ttn

ப்ளும்பெர்க் நிறுவனம் உலக அளவில் செய்திகளையும், பைனான்சியல் தகவலையும் அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அந்நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் 71 ஆயிரத்து 593 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.