அமெரிக்கா “ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை”குழுவைச் சந்தித்தது மகிழ்ச்சி : ஓ.பி.எஸ்

 

அமெரிக்கா “ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை”குழுவைச் சந்தித்தது மகிழ்ச்சி : ஓ.பி.எஸ்

கடந்த 10 ஆம் தேதி அமெரிக்க புறப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அந்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைப் பார்வையிட்டு வருகிறார்.

கடந்த 10 ஆம் தேதி அமெரிக்க புறப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அந்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைப் பார்வையிட்டு வருகிறார். அவருக்கு சிகாகோ உலக தமிழ்ச் சங்கம் சார்பாக “தங்கத் தமிழ் மகன்” விருதும், சமூக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  “சர்வதேச வளரும் நட்சத்திரம்” விருதும் காந்தியடிகளின் பெயரிலான “மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்” விருதும் வழங்கப்பட்டது. 

OPS

அதனையடுத்து, அமெரிக்கப் பயணத்தின் 6 ஆம் நாளான இன்று இந்தியத் தூதரக அலுவலகத்தில் ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கைக்கான இயக்குநர்கள் குழுவை ஓ.பி.எஸ் சந்தித்துப் பேசினார். அதில் , ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இந்திய மதிப்பிலான ரூ. 7 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்10 ஆயிரம் அமெரிக்க டாலர்களைத் தனது சொந்த நிதியிலிருந்து இந்தியாவிற்காக வழங்குவதாகத் தெரிவித்தார்.

 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஓ.பி.எஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அமெரிக்க நாட்டின் ஹூஸ்டன் இந்தியத் தூதரக அலுவலகத்தில் “ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை” இயக்குநர்கள் குழுவைச் சந்தித்துக் கலந்துரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.