அமெரிக்கா, ஈரான் இடையே போர்ப் பதற்றம் ! பெட்ரோல், டீசல், தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு ! 

 

அமெரிக்கா, ஈரான் இடையே போர்ப் பதற்றம் ! பெட்ரோல், டீசல், தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு ! 

கடந்த வெள்ளியன்று அமெரிக்க படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டார். இதற்குத் பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அமெரிக்க- சீன வர்த்தகப்போரில் சமரசம் ஏற்பட்டுவருவதால் அமெரிக்க பங்குச்சந்தைகள் உச்சத்தில் இருந்தன.

ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Soleimani

கடந்த வெள்ளியன்று அமெரிக்க படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டார். இதற்குத் பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அமெரிக்க- சீன வர்த்தகப்போரில் சமரசம் ஏற்பட்டுவருவதால் அமெரிக்க பங்குச்சந்தைகள் உச்சத்தில் இருந்தன. இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. ஆனால் இந்தத் தாக்குதலுக்கு பின்னர் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.

iran-attack

வெள்ளியன்று சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிவை சந்தித்து 41,464 புள்ளிகளுடனும், நிஃப்டி 55 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. இது குறித்து பங்குச்சந்தை நிபுணர் கூறுகையில், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால் சந்தை தற்காலிகமாக வீழ்ச்சி அடையும். இதுபோன்ற நேரங்களில் முதலீட்டாளர்கள் தங்கம், அமெரிக்க டாலர் ஆகியவற்றில் அதிகளவில் முதலீடு செய்வர். கடந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் மதிப்பு 25 சதவிகிதம்வரை உயர்ந்துள்ளது. 
ஈரான் எதிர் தாக்குதல் நடத்தவில்லை என்றால் இந்தப் பிரச்னை சரியாகும். ஒருவேளை ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், தங்கத்தின் விலை அதிகரிக்கும், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் என்று கூறினார்.

மேலும் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு கச்சா எண்ணெயின் விலை மூன்று சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. பிரச்னை தொடர்ந்தால் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க நேரிடும். இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.