அமெரிக்காவுக்கே இந்த நிலை… எனவே விழிப்புடன் இருப்போம்! – கொரோனா பற்றி டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கே இந்த நிலை… எனவே விழிப்புடன் இருப்போம்! – கொரோனா பற்றி டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

ஐரோப்பா, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா நேற்று தாண்டியது. சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. இந்த நிலை நமக்கும் வராமல் இருக்க விழிப்புடன் இருப்போம் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வல்லரசான அமெரிக்காவிலேயே கொரோனா பாதிப்பு சீனாவைத் தாண்டி சென்றுவிட்டது, இந்த நிலையில் நாம் விழிப்புடன் இருப்போம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா நேற்று தாண்டியது. சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. இந்த நிலை நமக்கும் வராமல் இருக்க விழிப்புடன் இருப்போம் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ramadoss

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “உலகின் ஈடு இணையற்ற வல்லரசான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று ஒரே நாளில் 17,507 பேரை கொரோனா வைரஸ் நோய் தாக்கியிருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 256 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியிருக்கிறது. சீனாவில் இதுவரை 81,285 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 85,268 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கே  இந்த நிலை எனும் போது நமது நிலை? எனவே விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம்!” என்று கூறியுள்ளார்.