அமெரிக்காவுக்கு உதவும் சுந்தர் பிச்சை; டொனால்ட் டிரம்ப் பாராட்டு!

 

அமெரிக்காவுக்கு உதவும் சுந்தர் பிச்சை; டொனால்ட் டிரம்ப் பாராட்டு!

கூகுள் தேடுபொறியில் தன்னைப் பற்றி ஒருதலைப்பட்சமாக செய்திகள்  வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தமிழருமான சுந்தர் பிச்சையை பாராட்டியுள்ளார்.

வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை, அமெரிக்க ஊழியர்களை கொண்டே, அமெரிக்கா மறுகட்டுமானம் செய்யப்படும், மெக்சிகோ எல்லையில் சுவர் உள்பட பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களுடன் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அண்மைய காலமாக சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு வருகிறார். இதனால், இரு நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

donald trump

இந்த நிலையில், கூகுள் நிறுவனம் அமெரிக்காவுக்கு உதவாமல் சீனாவுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் உதவி செய்து வருகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து பதில் அறிக்கை வெளியிட்ட கூகுள் நிறுவனம், நாங்கள் சீன ராணுவத்துடன் வேலை செய்யவில்லை. அமெரிக்க அரசுக்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுத்தே பனி புரிகிறோம் என விளக்கம் அளித்திருந்தது.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ட்வீட்டில், கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையை சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது கூகுள் நிறுவனம் நாட்டுக்காக செய்யும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பு நிறைவாக இருந்தது. சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவனம் அமெரிக்க ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமே முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சீனா மற்றும் அந்நாட்டு ராணுவத்துக்கு எந்த விதமான மறைமுக உதவியையும் சுந்தர் பிச்சை செய்யவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கூகுள் தேடுபொறியில் தன்னைப் பற்றி ஒருதலைப்பட்சமாக செய்திகள்  வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

பாஜக-வின் தேர்தல் வியூகங்கள் – பெங்களூரு தொகுதியில் களமிறங்கும் இளம் நடிகை