அமெரிக்காவில் 650சிசி திறன் கொண்ட இரண்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

 

அமெரிக்காவில் 650சிசி திறன் கொண்ட இரண்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்

அமெரிக்காவில் 650சிசி திறன் கொண்ட இரண்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க்: அமெரிக்காவில் 650சிசி திறன் கொண்ட இரண்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உலகம் முழுக்க இருக்கிறது. அதன் சக்தி வாய்ந்த எஞ்சின் மற்றும் வடிவமைப்பு ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். இந்நிலையில், இரு சிலிண்டர்களுடன் கூடிய 650சிசி எஞ்சின் திறன் கொண்ட இரண்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவை இண்டர்செப்டார் INT 650 (interceptor) காண்டினெண்டல் GT  650 (continental) ஆகிய பைக் மாடல்கள் ஆகும். இந்த பைக்குகள் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவையாக இருந்தது. உலக பைக் சந்தையை குறிவைத்து ராயல் என்ஃபீல்டு இந்த இரு பைக்குகளை தயாரித்துள்ளது.

இதில் இண்டர்செப்டார் 650 மாடலின் விலை இந்திய மதிப்பில் 4 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயாகவும், காண்டினெண்டல் 650 மாடலின் விலை 4 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்த வருடம் இறுதிக்குள் இவ்விரு பைக் மாடல்களும் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவற்றின் விலை 3 லட்ச ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.